பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பதினொரு செயலாற்றுகை அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டு அனுமதிக்கப்பட்டன.
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தலைமையில் அண்மையில் (11) கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கமைய வளிமண்டலவியல் திணைக்களத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கை, இலங்கை விமானப் படையின் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள், இலங்கை இராணுவத்தின் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள், இலங்கை கடற்படையின் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள், கடலோர பாதுகாப்பு படை திணைக்களத்தின் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள், சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகள், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, அனர்த்த முகாமைத்துவத் திணைக்களத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், ரணவிரு சேவை அதிகாரசபையின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, ரக்னா ஆரக்சன லங்கா கம்பனியின் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளே ஆராயப்பட்டு அனுமதிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் கௌரவ பாராளுனமற் உறுப்பினர்களான (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, சந்தன சூரியாராச்சி, (சட்டத்தரணி) அனுஷ்கா திலகரத்ன, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜீ.டி.சூரியபண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.


