அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பேராதெனிய பூந்தோட்டம் இன்று காலை முதல் நாள் முழுவதும் சிரமதான நடவடிக்கை..

  • :

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பேராதெனிய பூந்தோட்டம் இன்று காலை முதல் நாள் முழுவதும் சிரமதான நடவடிக்கை..

திட்வா சூறாவளியின் தாக்கத்தால் மகாவலி கங்கை பெருக்கெடுத்ததால் சேதமடைந்த பேராதனை தாவரவியல் பூங்கா வளாகத்தை சுத்தம் செய்யும் சிரமதான நடவடிக்கை இன்று (05) காலை முதல் நாள் முழுவதும் நடைபெற உள்ளது.​

சுற்றாடல் அமைச்சின் தலையீட்டுடன், பேராதனை தாவரவியல் பூங்கா திணைக்களம் இணைந்து இந்த சிரமதான நடவடிக்கையை பின்னவல விலங்கியல் பூங்கா, பல்லேகெல அரச மரக் கூட்டுத்தாபனம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்கேற்புடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் சுற்றுலாத் துறைக்கு அதிக பங்களிப்பை வழங்கும் இந்த அழகான சூழலை மீண்டும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்க நீங்களும் பங்களிக்கலாம். "பேராதனை பூந்தோட்டத்தை மீண்டும் அழகாக மாற்ற எங்களுடன் கைகோருங்கள்"

Related Articles