ராகம புனர்வாழ்வு வைத்தியசாலையில் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 30 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் குறைந்த செலவில் திருத்தம்.

ராகம புனர்வாழ்வு வைத்தியசாலையில் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 30 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் குறைந்த செலவில் திருத்தம்.
  • :

ராகம புனர்வாழ்வு வைத்தியசாலையில் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 30 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் ஆதர் சி. கிளார்க் நிறுவன பொறியியலாளர்களால் 5,000 ரூபாவிற்கும் குறைந்த செலவில் திருத்தம் செய்யப்பட்டது.

கம்பஹா மாவட்ட சுகாதாரக் குழுவின் தலைவரும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சருமான பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ், நவீன தொழில்நுட்பம் தொடர்பான ஆதர் சி. கிளார்க் நிறுவனத்தின் (ACCIMT) தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் ராகம வாதநோய் மற்றும் புனர்வாழ்வு வைத்தியசாலையின் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட மற்றும் நவீனமயப்படுத்தப்பட்ட உபகரணங்களின் முதற்கட்டத் தொகுதி உத்தியோகபூர்வமாக வைத்தியசாலையிடம் கையளிக்கும் நிகழ்வு அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையில் அண்மையில் குறித்த வைத்தியசாலையில் நடைபெற்றது.

Related Articles