நாட்டில் இடம் பெற்ற சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரணங்களை வான்வழி மற்றும் தரைவழி ஊடக இலங்கை விமானப்படையினர் விநியோகம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று 2025 டிசம்பர் 07 ம் திகதியும் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களினால் கிடைக்கப்பட்ட நிவாரண பொருட்கள் இலங்கை விமானப்படையின் பெல் 412, பெல் 212, MI17 மற்றும் Y12 விமானங்கள் மூலம் கொத்மலை, அஸ்கிரிய, கம்பளை, நியங்கந்தோர, இங்குருகல, உடுதும்பர, அம்பலியத்த, மல்கொல்ல, கல்கடபத்தனை ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. மேலும் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாத இடங்களில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களும் பாதுகாப்பான முறையில் வான்வழியாக இறக்கிவிடப்பட்டன.


