அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ், பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு நடத்த எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (7) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பல பாடசாலைகளின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் குறித்து மதிப்பாய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.