தற்போது காணப்படும் வறட்சியான காலநிலையுடன் ஏற்பட்டுள்ள அதிக வெப்பநிலை காரணமாக உடம்பில் நீரிழப்பு நிலை ஏற்படக்கூடும் என இலங்கை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது விசேடமாக உடம்பில் அதிக அளவில் வியர்வை அதிகரித்து வெளியேறுவதனால் உடம்பில் நீரில் அளவு குறைவடையக் கூடியதாகவிருப்பதுடன் இந்த நிலை அதிகரிப்பதனால் உடலுக்கு அதனை தாங்கிக் கொள்ள முடியாது என இச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதனால் மயக்கம் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் நீரிழப்பு நிலையினால் சில இயலாமை நிலையும் ஏற்படக்கூடும். அதனால் இந்த நிலையை தடுப்பதற்காக செயல்பட வேண்டும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.
விசேடமாக அதிக நீர்ப் பானங்கள் அருந்துதல், கடும் வெயிலில் நடமாடக் கூடிய நிலைமையைத் தவிர்த்தல், நிழல் காணப்படும் இடங்களில் முடிந்தவரை இருத்தல் இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை அருந்துதல் மற்றும் இனிப்புச் சுவை அதிகம் உள்ள பானங்களை அருந்துவதை தவிர்த்தல் போன்ற வழிகளை பின்பற்றுமாறு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்களுக்கு இந்த நிலை அதிக செல்வாக்குடையதாகக் காணப்படுவதுடன் அவர்களை அவதானத்துடன் செயற்பட அனுமதிக்க வேண்டும் என்றும், தற்போதைய உலர் காலநிலையினால் நீர் வெளியேறுவதை தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவர்கள் சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.