சமாதான நீதவான்களுக்கான நியமனம் தொடர்ந்தும் அரசியல் செல்வாக்கின் ஊடாக வழங்கப்பட மாட்டாது - நீதி அமைச்சர்

  • :
சமாதான மாட்டாது என்றும் அவர்களை நியமிப்பது மற்றும் பயிற்சி அளிப்பதற்காக சரியான முறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

 இன்று (05) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்

2013 ஆம் ஆண்டு முதல் இது வரை 66,315 சமாதான நீதவான்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளின் மக்கள் தொகை மற்றும் புவியியல் இருப்பிடம் மற்றும் நிலப்பரப்பின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சமாதான நீதிபதிகள் (200:1 என்ற விகிதத்தில்) 2025 முதல் தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 
அதன்படி, சுமார் 40,000 சமாதான நீதவான் நியமனங்களை வழங்குவதற்கு வாய்ப்புக் காணப்படுவதாகவும் மாதத்திற்கு 500-750 இடையேயான அளவில் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜூன் 2025 முதல் தொடங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமாதான நீதவான் சேவையை முறைப்படுத்தி தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 2025 ஆம் ஆண்டில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
 
சமாதான நீதவான்கள் தவறு செய்தால் புகார் செய்வதற்கான வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஒரு தரவுத்தள அமைப்பு அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமாதான நீதவான் பதவி மரியாதைக்குரிய பதவியாகவும் பொறுப்பான பதவியாகவும் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஒரு சமாதான நீதவான் 75 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று ஒரு குழுவால் முடிவு செய்யப்பட்டதாகவும், வயது திருத்தத்திற்கான கோரிக்கை வைக்கப்பட்டால், அதை மீண்டும் குழுவிடம் சமர்ப்பிக்கலாம் என்றும் விபரித்தார்.

Related Articles