கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர அவர்கள் 2025 மே மாதம் 20 ஆம் திகதி சபா பீடத்தில் நடந்துகொண்ட விதம் தொடர்பில் சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை கவனத்தில் கொண்டு, அது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளரான (திருமதி) ஹேமாலி வீரசேகர அவர்களின் தலைமையில் கௌரவ வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் கௌரவ எதிர்க் கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க ஆகியோர் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமித்திருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (23) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
