ஏற்றுமதி இலக்குகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு, பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெறும் பொறிமுறையை திறம்படச் செய்ய வேண்டும்- கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி
ஏற்றுமதி இலக்குகளை வெற்றியடையச் செய்ய வேண்டுமாயின் பிரதேச செயலக மட்டங்களில் செயற்படுத்தப்படும் பொறிமுறையை செயற்திறன் மிக்கதாக மேற்கொள்ள வேண்டும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திக்காக மாகாண மட்டத்தில் கிடைக்கும் பங்களிப்புகளை அதிகரிக்கும் நோக்கில் வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களின் தற்போதைய ஏற்றுமதி நிலைப்பாடு, ஏற்றுமதி திறன் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் உபாயத் திட்டங்கள் தொடர்பாக அமைச்சரின் தலைமையில் அண்மையில் குருணாகல் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.