மில்கோ (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனமாக ஹைலெண்ட் உற்பத்திகளை வாடிக்கையாளர்களிடம் பிரபலப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 500 ஹைலெண்ட் விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று (22) கமனல கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்ச கே.டி லால் காந்த தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ கோத்தாபய உரையாற்றுகையில்,
500 ஹைலண்ட் விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கும் இத்திட்டத்தின் மூலம் எமது உற்பத்திகளை ஒரே இடத்தில் கொள்வனவு செய்வதற்கு முடிவதுடன், திறிபோஷ, சீனிக் கம்பனியின் உற்பத்திகள், மசாலா உற்பத்தி சார்ந்த கூட்டுத்தாபனத்தின் உற்பத்திகள் போன்ற உயர்தரத்திலான உற்பத்திகளை சாதாரண விலைக்கு கொள்வனவு செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.
இதன்போது விற்பனை நிலையங்களின் பொறுப்புக்களாக; தேவைக்கேற்ப பொருட்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்திய ஹைலேண்ட் நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ கோத்தாபய, இந்த விற்பனை நிலையங்கள் மூலம் பால் மற்றும் இணைந்த உற்பத்திகளை பற்றாக்குறை இன்றி கொள்வனவு செய்வதற்கும் உள்நாட்டு உற்பத்திகளை பரவலாக்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.