ஜப்பானில் நடைபெறும் உலக இளைஞர் கப்பல் நகழ்வில் பங்கேற்க உள்ள இளைஞர்கள் இன்று (21) இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவை சந்தித்தனர்.
இந்த ஆண்டு நிகழ்வில் ஒன்பது இளைஞர்கள் பங்கேற்க உள்ளதுடன், அவர்கள் 24 ஆம் திகதி ஜப்பானுக்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்விற்காக ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்ட பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள், தொடர்ச்சியான நேர்காணல்களுக்குப் பின்னர், 3 மாத பயிற்சி வழங்கப்பட்டு இந்த நிகழ்விற்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
அங்கு, நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விளக்கக்காட்சிகள் (presentations), இலங்கையின் கலாச்சார மற்றும் கலை பன்முகத்தன்மை குறித்த விளக்கக்காட்சிகள் மற்றும் இலங்கை இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விளக்கக்காட்சிகள் என்பன இடம்பெற உள்ளன.