தடகளத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சாதனை படைத்த சுகாதாரப் பணியாளர் தர்ஷனி சந்திரரத்னவுக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்

தடகளத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சாதனை படைத்த சுகாதாரப் பணியாளர் தர்ஷனி சந்திரரத்னவுக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்
  • :

தடகளத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சாதனை படைத்த சுகாதாரப் பணியாளர் தர்ஷனி சந்திரரத்னவுக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

ஜனவரி மாதம்  9 முதல் 12 வரை இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற பொலன்னறுவை வைத்தியசாலையில் சுகாதார உதவியாளராக கடமையாற்றும் தர்ஷனி சந்திரரத்னவிற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் வாழ்த்துக்களை தெரிவித்தார். 


மெதிரிகிரிய, வெலிகம்புர, மஹா அம்பகஸ்வெவ பிரதேசத்தில் வசித்துவரும், இவர் தேசிய மற்றும் தடகளப் போட்டிகளில் சர்வதேச ரீதியில் திறமைகளை வெளிப்படுத்தி வரும்  தர்ஷனி சந்திரரத்ன, அண்மையில் சுகாதார அமைச்சில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரைச் சந்தித்தார். 

1500 மீற்றர் மற்றும் 400 மீற்றர் குறுகிய தூர ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கங்களை வென்ற இவர் 2025 ஆம் ஆண்டு இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய சீனியர் தடகளப் போட்டிகளில் 5000 மீற்றர் மற்றும் 800 மீற்றர் ஓட்டப் பந்தயங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். 100 x 4 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும், 400 x 4 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

அவர் 2019 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று 800 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் தடகளப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார், மேலும் 2023 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டிகளில் பங்கேற்று 5000 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார். 400 x 4 ரிலே பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார் 

பல தேசிய, சர்வதேச, மாவட்ட மற்றும் மாகாண விளையாட்டு போட்டிகளில் பங்கு கொள்ளும் இந்த விளையாட்டு வீராங்கனை, எந்தவொரு அனுசரணையாளரும் இன்றி, தனது தனிப்பட்ட பணத்தை   கொண்டு அயலவர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடனும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மிகவும் தைரியமான விளையாட்டு வீராங்கனையாக திகழ்கிறார்.


மேலும், அவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் சுகாதார உதவியாளராக கடமையாற்றி வருவதாகவும், அவரது விளையாட்டுத் திறமைக்கு வைத்தியசாலை ஊழியர்களும் உறுதுணையாக இருப்பதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.


சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர்  இதன்போது அவரது விளையாட்டு திறன்களை மேம்படுத்த தங்களால் இயன்ற ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார். 
சந்திரரத்னவின் குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]