சுற்றாடல் சட்டத் திருத்தம் குறித்த வட மாகாண அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

சுற்றாடல் சட்டத் திருத்தம் குறித்த வட மாகாண அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
  • :

சுற்றாடல் சட்டத் திருத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்வு  சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி,  சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல ஆகியோரின் வழிகாட்டலில், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் மற்றும் பணிப்பாளர் நாயகம் கபில ராஜபக்ஷ ஆகியோரின் ஒத்துழைப்புடன்  நேற்று (2026.03.01) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது வடமாகாணத்தில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டது. சுற்றாடல் அமைச்சின் கீழ் வட மாகாணத்தில் இயங்கும்  நிறுவனங்களின் அதிகாரிகளை அறிவூட்டும் நோக்கில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில், சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஸ்ரீபவனாதராஜா மற்றும் யாழ் மாவட்ட செயலாளர் என்.  பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், அமைச்சரின் ஆலோசகர் கலாநிதி ரவீந்திர காரியவசம், அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் திவங்க திலகரத்ன, யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலாளர்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வட மாகாண பணிப்பாளர் பி. துவாரகன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர். இந்நிகழ்வின் பிரதான உரையை சுற்றாடல் அமைச்சரின் ஆலோசகரும் சூழலியலாளருமான கலாநிதி ரவீந்திர காரியவசம் அவர்கள் நிகழ்த்தினார். 

 

#CentralEnvironmentalAuthority #MinistryofEnvironment #Jaffna

Related Articles