"சுத்தமான இலங்கை" திட்டம் குறித்து அமைச்சின் ஊழியர்களுக்கு அறிவுறுத்த மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த பாதுகாப்பு அமைச்சில இன்று (ஜனவரி 24) மற்றொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கமைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், கிராமப்புற வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்களை ஊக்குவித்தல் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுதல் உள்ளிட்ட முக்கிய சமூக-பொருளாதார சவால்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமைச்சின் பணியாளர்கள் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில், "சுத்தமான இலங்கை" திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற பாதுகாப்பு அமைச்சு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து இந் இந்நிகழ்வில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், நாடளாவ ரீதியில் , குறிப்பாக கிராமப்புற சமூகங்களுக்கிடையே மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டத்தின் நோக்கங்கள் நிறைவேற்றுவதன் அவசியம் இதன் போது எடுத்துரைக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில குணரத்னவின் பங்குபற்றலுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
"சுத்தமான இலங்கை" திட்டம் நாட்டின் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவும் முயல்கிறது. இதன் முக்கிய அம்சங்களில் டிஜிட்டல் மயமாக்களை மேம்படுத்துதல், உள்ளூர் பொருளாதாரத்தை ஆதரித்தல் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவித்தல் போயன்றவையும் அடங்கும்.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் பாதுகாப்பு அமைச்சு, தூய்மையான மற்றும் வளமான இலங்கை என்ற அரசாங்கத்தின் நோக்கத்தை ஆதரிப்பதில் அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. இந்த திட்டத்தின் வெற்றி பல்வேறு அரசுத் துறை நிறுவனங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையேயான சிறந்த ஒத்துழைப்பை பொறுத்தே அமையும் என்பதும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
சிரேஷ்ட அமைச்சு அதிகாரிகள், அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள், முப்படைகள் மற்றும் பொலிஸ் திணைக்கள பிரதிநிதிகள் மற்றும் அமைச்சின் பணியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.