துரித தொலைபேசி அழைப்பின் ஊடாக இலவசமாக முழுமையான முன் வைத்தியசாலை சேவைகளை வழங்கும் நாட்டின் சகல மாகாணங்களையும் இணைத்து செயற்படும் “சுவசரிய” அம்பியுலன்ஸ் சேவையை மேலும் பரவலாக்குதல் மற்றும் முன்னேற்றுவதற்காகவும், அச்சேவையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளை வழங்கி, வினைத் திறனான சேவையாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக புதிய திட்டத்தின் கீழ் “சுவசரிய” அம்பியுலன்ஸ் சேவை பணியாற்றுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ராஜகிரியில் அமைந்துள்ள சுவசரிய அம்பியுலன்ஸ் சேவை மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனை வெளியிட்டார்.
இதன் போது சுவசரிய அம்பியுலன்ஸ் சேவையின் தற்போதைய செயற்பாடுகளை அமைச்சர் மேற்பார்வை செய்தார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊட அமைச்சு