சுயாதீனத் தொலைக்காட்சி ஊடக வலையமைப்புடன் (ITN) இணைந்து செயற்படுத்தப்படும் MMC – ITN Campus இல் டிஜிட்டல் கல்வித் துறையில் சான்றிதழ் கற்கை நெறியை பூர்த்தி செய்த  குழுவிற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சுயாதீனத் தொலைக்காட்சி ஊடக வலையமைப்புடன் (ITN) இணைந்து செயற்படுத்தப்படும் MMC – ITN Campus இல் டிஜிட்டல் கல்வித் துறையில் சான்றிதழ் கற்கை நெறியை பூர்த்தி செய்த  குழுவிற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
  • :
சுயாதீனத் தொலைக்காட்சி ஊடக வலையமைப்புடன் (ITN) இணைந்து செயற்படுத்தப்படும் MMC – ITN Campus இல் டிஜிட்டல் கல்வித் துறையில் சான்றிதழ் கற்கை நெறியை பூர்த்தி செய்த குழுவிற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (11) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

 Digital Marketing, Multimedia Presentation (Television & Radio), Multimedia Content Creation, Social media marketing பயிற்சிப் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அவ்வாறே இப்பாடநெறியில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு தங்க விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அணில் ஜாசிங்க, சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் தலைவர் பிறியந்த வெதமுல்ல, மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles