எக மிடட கொவி பிமட தேசிய திட்டம் ஆரம்பம்

எக மிடட கொவி பிமட தேசிய திட்டம் ஆரம்பம்
  • :
 
“எக மிடட - கொவி பிமட” தேசிய திட்டம் அண்மையில் (15 ) கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் தலைமையில் பொல்கஹவெல ஹொதல்ல ஜய சுந்தரா ராம விகாரை அமைந்துள்ள வயல் பகுதியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இலங்கையின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக உணவு இருப்பை நாட்டினுள் பேணுதல், உணவு நுகர்விற்கு மேலதிகமாக விவசாய பயிர் இணைந்த ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் போன்றவற்றிற்காக செய்கை பண்ணப்படாத சகல வயல் மற்றும் விவசாய நிலங்களை வேளாண்மை செய்வதற்காக விவசாயிகளுக்கு தெளிவுபடுத்துவதற்கு இத்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்த வின் ஆலோசனைக்கு இணங்க கமத்தொழில் அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யு. பி. றோஹன ராஜபக்ஷவின் பங்களிப்புடன் இத்திட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 566 விவசாய சேவை பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
 
வேளாண்மை பண்ணப்படாத வயல் மற்றும் விவசாய நிலங்களின் உரிமையாளர்கள், தங்கி இருப்பவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கு உனக்கு சொந்தமான நிலங்களில் வேளாண்மை செய்கை பண்ணுவதாக அறிவித்து வீட்டுக்கு வீடு சென்று தெளிவுபடுத்துவதற்காக அறிவித்தல் பத்திரம் வழங்குவதற்கே தீர்மானிக்கப்பட்டதுடன், தெளிவுபடுத்தல் பெப்ரவரி 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இவ் விழிப்புணர்வூட்டல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் ஆலோசனைக்கு அமைய விவசாய அபிவிருத்தி திணைக்களம் உட்பட விவசாயத் துறையின் சகல அரச நிறுவனங்களின் பங்களிப்புடன் இத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]