'எல்ல ஒடிஸ்ஸி (நானுஓயா)' என்ற புதிய ரயில் சேவை நானுஓயா மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையே (10.02.2025) இன்று முதல் பயணிக்கின்றது.
சுற்றுலாப் பயணிகளின் அதிக தேவையைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே பொது முகாமைபாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார்.
அத்துடன், செவ்வாய் கிழமைகளைத் தவிர வாரத்தின் எல்லா நாட்களும் காலை 0810 மணிக்கு நானுஓயாவிலிருந்து பதுளை வரை பயணிக்கும் இந்த ரயில், பி.ப 01.00 மணிக்கு பதுளையிலிருந்து நானுஓயா வரை பயணிக்கும்.