மஹவிலிச்சி பிரதேச செயலகத்தின் ஒயாமடுவ கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பெருங்குளம் கிராமத்தின் மைத்ரீ விகாரையில் அமைக்கப்பட்ட நீர் சுத்தீகரிப்பு நிலையம், மத அனுஷ்டானங்களுக்கமைய சீனத் தூதுவர் ஷே ஷென் ஹொன்னால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்த திட்டம் அபயகிரி விகாராதிபதியின் உதவியுடன், இலங்கை-சீன பௌத்த நட்புறவு சங்கம் மற்றும் சீன அரசாங்கத்தின் கூட்டு முயற்சியில், கடற்படையின் ஒத்துழைப்புடன் நான்கு மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதிகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
மேலும், இலங்கையில் இதுபோன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சீனத் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.


