தானியங்கி பொருள் முகாமைத்துவ அமைப்பு - பதிப்பு 2 மற்றும் myQ1 பயன்பாட்டின் அதிகாரப்பூர்வ வெளியீடு 2025 பெப்ரவரி 19, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பங்குபற்றினார்.
இந்த நிகழ்வின் முக்கியத்துவத்திற்கு களம் அமைத்து, போர் கருவி படையணி வரலாற்றை எடுத்துக்காட்டும் ஆவணப்படத்துடன் நிகழ்வு தொடங்கியது. அதைத் தொடர்ந்து, போர் கருவி சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.பீ.என்.எஸ்.கே. காரியவசம் எல்எஸ்சீ ஏஏடிஓ அவர்கள் பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை அன்புடன் வரவேற்றார்.
விழாவின் போது, இராணுவத் தளபதி தானியங்கி பொருள் முகாமைத்துவ அமைப்பு - பதிப்பு 2 மற்றும் myQ1 பயன்பாட்டை முறையாக அறிமுகப்படுத்தியதுடன் இது இராணுவத்தின் வழங்கல் மற்றும் பொருள் முகாமைத்துவ திறன்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்குபற்றினார்.