இலங்கை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கொஸ்தாபில் பதவிகளுக்கான எழுத்துப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்

இலங்கை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கொஸ்தாபில் பதவிகளுக்கான எழுத்துப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்
  • :

2442 இலக்க 2025.06.20 திகதிய அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க, இலங்கை பொலிஸ் சேவையின் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கொஸ்தாபில் பதவிக்காக அதிகாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான எழுத்துப் பரீட்சை 2025.10.04 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 07பரீட்சை மத்திய நிலையங்களில் 7036 பரீட்சார்த்திகளுக்காக நடைபெறவுள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்காக ஆட்சேர்ப்புச் செய்யும் எழுத்துப் பரீட்சை 2025.10.04 திகதி 1300 மணி முதல் 1500 மணி வரை 

பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கான எழுத்துப் பரீட்சை 2025.10.04 திகதி 1000 மணி முதல் 1215 வரை 

 

பரீட்சை மத்திய நிலையங்கள் 

1. விவேகானந்தா வித்தியாலயம், கொழும்பு 13

2. ஹமீத் அல் ஹுசைனி வித்தியாலயம், கொழும்பு 12,

3. குரு குல வித்தியாலயம், களனிய

4. ஸ்ரீ சுமங்களா வித்தியாலயம், கண்டி 

5. சில் வெஸ்டர் வித்தியாலயம், கண்டி 

6. வலிசிங்க ஹரிஷ் சந்திர வித்தியாலயம், அனுராதபுரம் 

7. புனித அலோசியஸ் வித்தியாலயம், காலி.

 

பரீட்சைக்காக தகைமை பெற்றவர்கள், 2025.09.30 திகதியளவில் பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்காத பரீட்சார்த்திகள் அது தொடர்பாக 011-2687339 என்ற அல்லது 011 -2687329 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.

 

#news #information #exams

Related Articles