இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவி வழங்கல் தொடர்பான கருத்திட்டத்திற்கு இலங்கை மற்றும் சீனாவுக்கும் இடையில் ஒப்படைக்கும் சான்றில் கையொப்பமிடுவதற்கு தீர்மானம்

 இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவி வழங்கல் தொடர்பான கருத்திட்டத்திற்கு இலங்கை மற்றும் சீனாவுக்கும் இடையில் ஒப்படைக்கும் சான்றில் கையொப்பமிடுவதற்கு  தீர்மானம்
  • :

இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவி வழங்கல் தொடர்பான கருத்திட்டத்திற்கு (அரிசி, மீன்பிடி வலைகள் மற்றும் பொருத்து வீடுகள்) உள்ளிட்ட இலங்கை மற்றும் சீனாவுக்கும் இடையில் ஒப்படைக்கும் சான்றில் கையொப்பமிடல் தொடர்பாக , இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறியளவிலான மீனவர்களுக்கு 35.7 மில்லியன் யுவான்கள் செலவில் சீன மக்கள் குடியரசு கீழ்க்காணும் அவசர உதவிகளை வழங்கியுள்ளது :

சிறியளவிலான மற்றும் குறைந்த வருமானங் கொண்ட மீனவர்களுக்கான 75,000 மீன்பிடி வலைகள்

சிறியளவிலான மற்றும் குறைந்த வருமானங் கொண்ட மீனவர்களுக்கான 500 பொருத்து வீடுகள்

சிறியளவிலான மற்றும் குறைந்த வருமானங் கொண்ட மீனவர்களுக்கான 1,630 டொன் அரிசி

இவ்வனைத்துப் பொருட்களும் கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சினால் 2024 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், அரிசி மற்றும் மீன்பிடி வலைகள் தற்போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அவசர மனிதாபிமான உதவி வழங்கல் சான்றில் சீன மக்கள் குடியரசு மற்றும் இலங்கை அரசுக்கிடையில் கையொப்பமிடுவதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கபட்டுள்ளது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]