பாதுகாப்பு செயலாளர் இத்திட்டம் தொடர்பில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நிறுவன தலைவர்களுடன் கலந்துரையாடினார்
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு) தலைமையின் கீழ் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் முப்படைத் தளபதிகள் உட்பட அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்ககளின் பங்குபற்றலுடன் ‘Clean Sri Lanka’ முன்னெடுப்பு தொடர்பான கூட்டமொன்று நேற்று மாலை (ஜன. 07) அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இத்திட்டம் தொடர்பான இதற்கு முந்தைய அறிமுகக் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இக்கூட்டம் நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தவும் சமூகத்தின் நலனுக்காக இந்தத் திட்டத்தை எவ்வாறு திறம்படச் செயல்படுத்தலாம் என்பதற்கான செயல்கள், மற்றும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடவும் இக்கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், கலந்துக்கொண்ட ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில பண்டார, சமூக, சுற்றாடல் மற்றும் நன்னெறி மறுமலர்ச்சி மூலம் சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட இந்த வேலைத் திட்டம் தொடர்பான விளக்க உரையாற்றினார்.
இந்த திட்டம் ஒரு வளமான தேசத்தை உருவாக்குவதையும், அனைவருக்கும் அழகான வாழ்க்கையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ள அதேவேளை அரச நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களிலும் பொறுப்புணர்வு மற்றும் பொறுப்பு கூரலை வலியுறுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கு பொது மக்களின் தீவிர ஈடுபாடும் ஆதரவும் முக்கியமானது. இதை சமூக ரீதியாக செயல்படுத்துவதில் பாதுகாப்பு அமைச்சின் வகிபாகம் குறித்து சிரேஷ்ட அதிகாரிகள் ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.