இலங்கையின் தேசிய கரிம விவசாயத்திற்கான சட்ட நிலை மற்றும் அதன் முன்மொழியப்பட்ட வேறுபாடுகள் தொடர்பாக தேசிய ஆலோசனை வேலைத்திட்டம் ஒன்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தலைமையில் நேற்று (04) இடம்பெற்றது.
தேசிய கரிம விவசாய முறையின் சட்ட கட்டமைப்பில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை அரச மற்றும் தனியார் துறையினருக்கு அறிமுகப்படுத்துவதே இந்த ஒருநாள் பயிற்சிப்பட்டறையின் நோக்கமாகும்.
இலங்கையின் தேசிய கரிம தரநிலையை ஐக்கிய இராச்சியத்தின்(GB) கரிம விதிமுறைகளுடன் ஒருங்கிணைத்தல், ஒழுங்குமுறை இடைவெளிகளைக் கண்டறிதல் மற்றும் சர்வதேச தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்தல் போன்ற முக்கிய துறைகள் தொடர்பாக இந்தப் பயிற்சிப்பட்டறையில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்கான தொழில்நுட்ப உதவி UKTP திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.