Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்திடமிருந்து நிதி நன்கொடை

Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்திடமிருந்து நிதி நன்கொடை
  • :

Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்திடமிருந்து நிதி நன்கொடை

'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்தினால் 10 இலட்சம் ரூபாய் நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சதானந்தன் நேசராஜனினால் (Sathananthan Nesarajan) இதற்குரிய காசோலை இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்தின் உதவிப் பொது முகாமையாளர் (நிதி) எஸ். என். கே. குணசேகர மற்றும் மேலதிக பொது முகாமையாளர் மொஹமட் தில்ஷான் சார்டீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Articles