இந்திய உயர்ஸ்தானிகர் ( Santosh Jha ) மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோர் இன்று (06) இளைஞர் விவகாரம்
மற்றும் விளையாட்டு அமைச்சில் சந்தித்தனர்.
இந்த நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விளையாட்டு மேம்பாட்டுக்காக நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும், கிரிக்கெட் உள்ளிட்ட பிற விளையாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார்.