25 ஜனவரி 2025 திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு , மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல இடங்களிலும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஆங்காங்கே பெய்யக்கூடும். மேல் மாகாணத்தில் காலை வேளையில் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது.
ஊவா, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 75 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மத்திய மலை நாட்டின் கிழக்கு சரிவுகளில் மற்றும் வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 30 தொடக்கம் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மேற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணம் காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் காலை வேளையில் பணி மூட்டம் அதிகம் காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்வதற்காக அவசியமான முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறது.