இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
  • :

  சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

 

ஜூலை 13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஜூலை 13ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

Related Articles