கல்வி அமைச்சின் முத்திரை பதித்து, செயலாளர் கையொப்பமிட்டதாக போலியாக தயிரிக்கப்பட்ட கடிதமொன்றினூடாக, நாடு பூராகவும் இன்று (14) பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற மாட்டாது என்ற போலி பிரச்சாரம் ஒன்று சமூக ஊடகங்களின் ஊடாக பரவி வருகின்றது.
இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவற்றை சமூக ஊடங்களில் பரப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.