இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல் பகுதியில் நாட்டிற்கு வரவுள்ளதாகவும், அதன் போது இரு நாடுகளுக்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சில கைச்சாத்திடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்றைய ஒதுக்கீட்டு சட்டமூல விவாதத்தின் போது, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செலவு தொடர்பான விவாதத்தில் கலந்து கண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இன்று (15) இதனை குறிப்பிட்டார்.
இச்சுற்றுப் பயணத்தின் போது சம்பூர் சூரிய மின்சார திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், மகவைலிருந்து அனுராதபுரம் வரையான புகையிரத சமிக்ஞைகள் கட்டமைப்பை திறந்து வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் விபரித்தார்.
ஜனாதிபதியின் கடந்த இந்திய சுற்றுப்பயணத்தின் போது இந்த வாய்ப்புகள் நாட்டிற்குக் கிடைத்ததாகவும், இந்திய பிரதமர் நாட்டிற்கு வருகை தந்ததன் பின்னர் உத்தியோகபூர்வமாக அதனை திறந்து வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் மலைநாட்டு மக்களுக்காக வீடமைப்புத் திட்டம் ஒன்றுக்கான மற்றும் நிதி உதவி கிடைத்தது என்றும் இந்த குறுங்காலத்தினுள் அந்த ஒத்துழைப்பு இந்திய அரசாங்கத்தினால் கிடைத்ததாகவும் அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார்.