இராணுவத் தளபதி வன்னி பாதுகாப்புப் படைக்கு விஜயம்

இராணுவத் தளபதி வன்னி பாதுகாப்புப் படைக்கு விஜயம்
  • :

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 பெப்ரவரி 08 அன்று வன்னி பாதுகாப்புப் படைக்கு விஜயம் மேற்கொண்டார்.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சீ. பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் இராணுவத் தளபதியை வரவேற்றார். பின்னர், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகப் படையினரால் அவருக்கு சம்பிரதாய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், இராணுவத் தளபதி போர் வீரர்கள் நினைவுத் தூபியில் உயிர்நீத்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நிகழ்வை நினைவுகூரும் வகையில் குழுப்படம் எடுக்கப்பட்டது.

இந்த விஜயத்தின் போது, தளபதிக்கு பொதுப்பணி நிலை அதிகாரி 1 (செயற்பாடுகள்) அவர்களினால் அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

படையினருக்கு உரையாற்றிய இராணுவத் தளபதி, முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் பெருமைமிக்க குடிமகனாக அர்ப்பணிப்பு மற்றும் பெருமையுடன் தங்கள் சிறந்த சேவையைத் தொடர பணியாளர்களை ஊக்குவித்தார். ஆயுதப் படைகளுக்குள் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை அவரது உரை வலியுறுத்தியது. ஒவ்வொரு அதிகாரி மற்றும் சிப்பாய் தேசத்தின் பாதுகாவலர்களாக மட்டுமல்லாமல், சமூகத்தில் முன்மாதிரியாகவும் இருக்கும் பங்கை அவர் எடுத்துரைத்தார். மேலும், கடமையின் போதும், கடமையில் இல்லாத நேரத்திலும் உயர் ஒழுக்கத்தை பேணுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

மேலும், அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பழக்கவழக்கங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தினார். குறிப்பாக நிகழ்நிலை சூதாட்டத்தின் ஆபத்துகள் குறித்து எச்சரித்தார். பணியாளர்கள் தங்கள் தொழில்முறை பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஆயுதப் படைகளின் உறுப்பினர்களாக அவர்களின் நல்வாழ்வு, ஒழுக்கம் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனை சமரசம் செய்யக்கூடிய கவனச்சிதறல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பின்னர், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி இராணுவத் தளபதிக்கு நினைவு சின்னம் வழங்கி, நன்றி தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் சிறப்பம்சமாக, வவுனியா அடம்பகஸ்கட பிரதேசத்தில் வசிக்கும் திரு. எஸ்.டி. சுரேஷ் குமார மற்றும் அவரது குடும்பத்தினருக்கு புதிதாக புனரமைக்கப்பட்ட வீட்டின் சாவியை இராணுவத் தளபதி கையளித்தார். இந்த வீடு சுதர்மாராமய மகா விஹாரையின் நிதியுதவியில், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் பொறியியல் சேவைகள் படையணி படையினரின் உதவியுடன் கட்டப்பட்டது. இந்த முயற்சி தேவையுடைய குடும்பத்திற்கு ஆதரவை வழங்கியது.

இதனைத் தொடர்ந்து சுதர்மாராமய மகா விகாரைக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி, விகாரையின் பிரதமகுருவான வண. அடம்பகஸ்கட கலாய்ன திஸ்ஸ அபிதான நாயக்க தேரரைச் சந்தித்தார். பின்னர், மடுகந்த ஸ்ரீ தலதா விகாரைக்கு விஜயம் செய்த அவர், விகாரையின் பிரதமகுரு வண. மூவடகம ஆனந்த தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர், இராணுவத் தளபதி அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டார். பின்னர் அதிகாரிகள் உணவகத்திற்குச் சென்று, அங்கு அதிகாரிகளுக்கு உரையாற்றியதுடன், தனது விஜயத்தை நினைவுகூரும் வகையில் அதிதிகள் பதிவேட்டுப் புத்தகத்தில் பாராட்டுக்களை பதிவிட்டார்.

இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]