இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 24 மற்றும் 25 ம் திகதிகளில் யாழ். குடாறாட்டிற்கான விஜயம் மேற்கொண்டார்.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதியை, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம். யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் வரவேற்றார்.
இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி ஸ்ரீ நாகவிகாரைக்கு விஜயம் மேற்கொண்டு, வண. மீகஹஜந்துர ஸ்ரீ விமல தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றார். பின்னர், அவர் யாழ் ஆயர் இல்லத்திற்குச் சென்று, யாழ். மறைமாவட்டத்தின் ஆயர் வண. அருட்தந்தை பீ. ஜோசப்தாஸ் ஜபரத்ன ஆண்டகை அவர்களை சந்தித்தார். நல்லூர் கோவிலிலும் வழிபாடுகளில் ஈடுபட்டார். மேலும் தலைமை குருக்கல் மைகுண்டல் சுவாமி அவர்களிடம் ஆசிகளைப் பெற்றார்.
பின்னர், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி காங்கேசன்துறை இலங்கை இராணுவ நல விடுதிக்கு சென்று நலவிடுதியிலுள்ளவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர், யாழ், வரணி மத்திய கல்லூரியின் வரணி ஒன்ட்ரியம்-யு.கே. மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இராணுவத் தளபதி கலந்து கொண்டார். 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 523 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 523 வது காலாட் பிரிகேட் மற்றும் 5 வது பொறியியல் சேவைகள் படையணி படையினரால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மறுநாள், யாழ்ப்பாணம், கொடிகாமம் தெற்கில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டை இராணுவத் தளபதி திரு. துரைசிங்கம் ராஜின்தாஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக திறந்து வைத்தார். 7 வது விஜயபாகு காலாட் படையணி படையினரின் உதவியுடன் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டது.
இராணுவத் தளபதி 52 வது காலாட் படைப்பிரிவிற்கு மேற்கொண்ட விஜயத்துடன் இரண்டு நாள் விஜயம் நிறைவடைந்தது. அங்கு, தளபதி அப்பிரதேசத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றினார். தனது உரையில் செயல்பாட்டுத் தயார்நிலை, திறமையான நிர்வாகம் மற்றும் பணியாளர் நலன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பின்னர் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் கலந்துயாடலில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வுகளில் முதன்மைப் பணிநிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.