நுவரெலியா வசந்த விழா நேற்று (01) காலை அழகான கலாச்சார அம்சங்கள் மற்றும் பாடசாலை இசைக்குழுக்கள் உட்பட பல அம்சங்களுடன் தொடங்கியது.
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்னால் இந்த ஆரம்ப விழா நடைபெற்றது, இதில் மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜி.எச்.எம். அஜித் பிரேமசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நுவரெலியா மாநகர சபையால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் வசந்த விழா ஏப்ரல் மாதம் முழுவதும் நடைபெறும், இதில் குதிரைப் பந்தயம், மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம், மலர் கண்காட்சி, பட்டம் விடும் போட்டி உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறும்.
இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், நுவரெலியா மாநகர ஆணையாளர் எச்.எம். பண்டார உட்பட பலர் கலந்து கொண்டனர்.