ஹைலேண்ட் யோகட் மற்றும் பாலின் விலை நேற்று (01) முதல் குறைக்கப்பட்டன.
யோகட் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்
அதன் புதிய விலை 70 ரூபாய்.
450 மில்லி லீட்டர் நீண்ட நாள் வைத்திருக்கக்கூடிய திரவப் பால் பக்கெட் ஒன்று 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 200 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
900 மில்லி லீட்டர் நீண்ட நாள் வைத்திருக்கக்கூடிய திரவப் பால் பாக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது .
அதன் புதிய விலை 380 ரூபாய்.
மில்கோ நிறுவனம் இது குறிப்பிடுகையில், 450 மில்லிலீட்டர் மூன்று நாட்கள் செல்லுபடியாகும் திரவப் பால் பாக்கெட் ஒன்று 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.