இறப்பர் நிலங்களை வரைபடமாக்கும் பணி ஆரம்பம்

இறப்பர் நிலங்களை வரைபடமாக்கும் பணி ஆரம்பம்
  • :

ஐரோப்பிய ஒன்றியம், காடழிப்பைத் தடுக்கும் நோக்கத்துடன், இறப்பர் சார்ந்த பொருட்கள் மற்றும் அவற்றுக்கான மூலப்பொருட்களை அதன் உறுப்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை (EUDR) அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

உலகளாவிய அளவில் காடழிப்பு மற்றும் காடழிப்பு தொடர்பான பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியைத் தடுக்கும் நோக்கத்துடன் இது அமைந்துள்ளது. இறப்பர் விநியோகச் சங்கிலிகள் காடழிப்புக்கு பங்களிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக விவசாயப் பகுதிகளின் துல்லியமான வரைபடத்தை உருவாக்குவது ஒரு முக்கிய தேவையாகும்.

 

இவ்வாறு இறப்பர் அபிவிருத்தி திணைக்களம் மற்றும் இலங்கை அளவையியல் திணைக்களம் ஒன்றிணைந்து நவீன பூகோள தகவல் கட்டமைப்புத் தொழில்நுட்பத்தைப்  (GIS) பயன்படுத்தி இறப்பர் நிலங்களை அளவிடும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

 

இத்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டில் சகல சிறிய இறப்பர் நிலங்களில் புவியியல் தொலைவுத் தூரங்களை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

 இந்த நில வரைபடப் பணிகளின் பின்னர் இறப்பர் அபிருத்தித் திணைக்களம்  QR குறியீட்டை விவசாயிகளுக்கு கட்டணம் இன்றி வழங்குவதுடன், இறப்பர் உற்பத்தி வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் போது விவசாயிகளினால் இந்த  QR குறியீட்டினால் உள்ளடக்கப்பட்ட தகவல்கள் வர்த்தகர்களுக்கு வழங்குவது கட்டாயமாகும். 

 

அதன்படி இறப்பர் நிலங்களை அளவீடு செய்யும் பணிகளுக்காக இலங்கை அளவையியல் திணைக்களத்தின் மற்றும் இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  இத்துறைக்கு வருகை தரும் போது சிறிய தோட்ட உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் போது தோட்ட உரிமையாளர்களின் பங்குபற்றல் எதிர்பார்க்கப்படுவதுடன் சந்தர்ப்பத்தில் காணிகளை அடையாளம் காணும் வசதிக்காக இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தினால் வெளியிடப்படும் இறப்பர் நடுவதற்கான அனுமதிப்பத்திரம், காணியின் உரிமை பத்திரம் அல்லது ஏனைய உடனடி ஆவணங்கள் மற்றும் நிலத்தின் திட்டம்/ வரைபடத்தை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

Related Articles