ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (31) யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுதற்காக அங்கு விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (31) காலை 10.30 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
அதன் பின்னர் இன்று பிற்பகல் 1:30 மணிக்கு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மற்றும் பிற்பகல் 3:30 மணிக்கு சாவகச்சேரி பிரதேசத்தில் இடம்பெறும் சந்திப்புகளிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.