ஜனாதிபதிக்கும் இலங்கை இளம் தொழில்முனைவோர் மன்றத்தின் (COYLE)  பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதிக்கும் இலங்கை இளம் தொழில்முனைவோர் மன்றத்தின் (COYLE)  பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு
  • :

உள்நாட்டு தொழில்முனைவோரை வலுப்படுத்தி பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் நோக்கம்

 - ஜனாதிபதி

 வர்த்தகத் துறைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், சட்ட விதிகளை உருவாக்குதல் மற்றும் ஒழுங்குபடுத்தலை அரசாங்கம் மேற்கொள்கிறது என்றும், உள்நாட்டு வர்த்தகர்களுக்கு மற்றும் தொழில்முனைவோருக்கு சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தி, அவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முழுமையாக பங்களிக்க உதவுவது, அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

 

இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், இலங்கை இளம் தொழில்முனைவோர் மன்றத்தின் (COYLE) பிரதிநிதிகளுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

 

இந்தத் துறையின் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்ததுடன், அதற்கான முன்மொழிவுகளையும் சமர்ப்பித்தனர்.

 

நாட்டை  நவீனமயப்படுத்த இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதன்போது அரச சேவைக்குத் தேவையான நவீன தொழிநுட்பம் மற்றும் வசதிகளை வழங்குவதுடன் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டார்.

 

2026 வரவுசெலவுத் திட்டத்திற்கான தமது ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்க வாய்ப்பளித்ததற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த பிரதிநிதிகள் குழு,  ஊழல் மற்றும் மோசடி அற்ற, சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும் ஒரு நாட்டை உருவாக்குவதற்கான ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் பாராட்டியது.

 

 

 

 

மேலும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் அவர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நினைவுப் பரிசையும் வழங்கினர்.

 

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க ஆகியோருடன் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை இளம் தொழில்முனைவோர் மன்றத்தின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Related Articles