பிரஜா சக்தி' திட்டத்தின் மூலம் சுயமுயற்சியால் முன்னேறும் சமூகத்தை உருவாக்குவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்துவதே எதிர்பார்ப்பாகும்

பிரஜா சக்தி' திட்டத்தின் மூலம் சுயமுயற்சியால் முன்னேறும் சமூகத்தை உருவாக்குவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்துவதே எதிர்பார்ப்பாகும்
  • :
பிரஜா சக்தி' திட்டத்தின் மூலம் சுயமுயற்சியால் முன்னேறும் சமூகத்தை உருவாக்குவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்துவதே எதிர்பார்ப்பாகும் - பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன

 'பிரஜா சக்தி' திட்டத்தின் மூலம் அரசாங்கம் எதிர்பார்ப்பது, நிவாரணங்களில் தங்கியிருக்கும் மனப்போக்கை மாற்றி, கடினமாக உழைக்கக்கூடிய விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட உற்பத்தியாளர்கள் சுயமுயற்சியால் முன்னேறுவதற்குத் தேவையான சூழலை உருவாக்குவதாகும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

வறுமையை ஒழிப்பதற்கான "பிரஜா சக்தி" தேசிய இயக்கத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” தேசிய வேலைத்திட்டத்தின் புத்தளம் மாவட்டத் தொடக்க விழாவில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது நாத்தாண்டிய, மைலாவ குளத்தின் பிரதான மதகிலிருந்து நீர் வெளியேறும் இருபுறமும் பக்கச்சுவர்களை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதற்கு இணையாக நேற்று (02) நாள் முழுவதும் புத்தளம் மாவட்டத்தின் பிரதேச செயலகப் பிரிவுகளில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

Related Articles