‘திட்வா’ அனர்த்த நிலமை காரணமாக பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவில் மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் நோக்கில் செயற்படுத்தப்படும் புதிய வீடமைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்தில் நிருமாணப் பணிகள் வெற்றி கரமாக நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நடைபெற்றது.
இதன் முதல் கட்டத்தில் 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன் வீடு முழுமையாக பாதிக்கப்பட்ட 11குடும்பங்களுக்காக 11 புதிய வீடுகளின் நிருமாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கும் குறைவான காலப் பகுதியில் முதல் கட்டத்தில் 11 வீடுகளும் கூரை மட்டம் வரை வெற்றிகரமாகக் கட்டப் பட்டு நிறைவு செய்யப்பட்
டுள்ளன.


