நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவையின் அனைத்து உத்தியோகத்தர்களுக்குமான IIஆம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2026

நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவையின் அனைத்து உத்தியோகத்தர்களுக்குமான IIஆம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2026
  • :

2026 செப்டம்பர் மாதம் நடாத்தப்படவுள்ள, நாட்டின் அனைத்து தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்களுக்குமான IIஆம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைக்கான வர்த்தமானி அறிவித்தல் 2026.07.17 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இவ்வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பங்களை, இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து 2026.07.20 முதல் 2026.08.10 வரை இணையவழிப் பிரவேச முறைமை (Online) மூலம் சமர்ப்பிக்கலாம்.

 

இலங்கை ஆசிரியர் சேவையின் 2 - II தரம் உடைய, இளங்கலை கல்வியியல் பட்டத்தின் (B.Ed) அடிப்படையில் நேரடியாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர்கள் தவிர்ந்த, அத்தரத்திற்குப் பதவியுயர்வு பெற்ற அல்லது இலங்கை ஆசிரியர் சேவையின் 3ஆம் தரத்திற்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் 2- II தரத்திற்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், 2- II தரத்திலான தங்களது சேவைக்காலம் 04 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னர் இவ் IIஆம் வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சையைப் பூர்த்தி செய்தல் வேண்டும். மேலும், 2025.06.30ஆம் திகதிக்கு முன்னர் IIஆம் வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சையைப் பூர்த்தி செய்யாத போதிலும், அத்தேவையை எதிர்காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு 2 - I தரத்திற்குப் பதவியுயர்வு அளிக்கப்பட்ட ஆசிரியர்களும், ஆசிரியர் சேவையின் 1ஆம் தரத்திற்கு மேலும் பதவியுயர்வு பெற வேண்டுமாயின் இவ்வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சையைப் பூர்த்தி செய்வது அத்தியாவசியமாகும்.

 

இவ்வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்குரிய சுயகற்றல் மொடியுள்களின் (Self-study modules) பாடத்திட்டங்கள் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கல்வி அமைச்சின் e – thaksalawa உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

 

இப்பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்குச் சுயகற்றல் முறைமை பரிந்துரைக்கப்படுவதுடன், கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணைய இணைப்பின் (Link) ஊடாக e - thaksalawa இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, அதில் IIஆம் வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சையின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாடவிடயங்களைக் கற்று பரீட்சைக்குத் தோற்றுமாறு ஊக்குவிக்கப்படுகின்றீர்கள்.

 

https://e-thaksalawa.moe.gov.lk/lcms/course/view.php?id=1065

Related Articles