கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் முதலாவது சர்வதேச வர்த்தக மற்றும் முகாமைத்துவ மாநாடு - ICCM 2026

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் முதலாவது சர்வதேச வர்த்தக மற்றும் முகாமைத்துவ மாநாடு - ICCM 2026
  • :

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம் (Faculty of Commerce and Management) தனது முதலாவது சர்வதேச வர்த்தக மற்றும் முகாமைத்துவ மாநாட்டை (International Conference on Commerce and Management – ICCM 2026) எதிர்வரும் 2026 ஜூலை 23 ஆம் திகதி நடத்தவுள்ளது.

“Reimagining Business in a Versatile Environment: Connectivity and Innovation” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாடு, உலகளாவிய கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், தொழில்துறை நிபுணர்கள், முயற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரை ஒரே தளத்தில் இணைத்து, வணிக மற்றும் முகாமைத்துவத் துறையில் உருவாகிவரும் புதிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிரும் சிறந்த சந்தர்ப்பமாக அமையவுள்ளது.

 

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ். அருள்ராஜ் சிறப்பு விருந்தினராகவும், கிழக்குப் பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் எப்.சி.ராகல் கௌரவ விருந்தினராகவும் பங்கேற்கவுள்ளனர்.

 

மேலும், இந்தியாவின் Gandhigram Rural Institute (DTBU) துணைவேந்தர் பேராசிரியர் என். பஞ்சநாதம் மற்றும் Vikrant University துணைவேந்தர் பேராசிரியர் அதுல் குமார் ஆகியோர் பிரதான உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.

 

இம்மாநாட்டிற்கு வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தின் மாநாட்டுத் தலைவரான த.பரந்தாமன் தலைமை தாங்கவுள்ளதுடன், மாநாட்டுச் செயலாளராக எம்.எஸ். தயாராஜ் செயற்படவுள்ளார். நிறைவுரையை பேராசிரியர் த. மதிவேந்தன் வழங்கவுள்ளார்.

 

ICCM 2026 மாநாட்டில் பின்வரும் துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறவுள்ளன.

 

* கணக்கியல் மற்றும் நிதி

* வர்த்தகம் மற்றும் வணிகச் சூழல்

* பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் பொதுக் கொள்கை

* தொழில் முனைவு மற்றும் புத்தாக்கம்

* தகவல் அமைப்புகள் மற்றும் வணிக பகுப்பாய்வு

* முகாமைத்துவம் மற்றும் மனிதவள முகாமைத்துவம்

* சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் நடத்தை

* நிலைத்தன்மை மற்றும் நிறுவன ஆளுமை

 

இம்மாநாடு ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையினருக்கிடையே சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, புதிய ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் புதுமையான சிந்தனைகளைப் பகிரும் முக்கிய அறிவியல் மேடையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தின் முதலாவது சர்வதேச மாநாடாக அமையும் ICCM 2026, பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் உலகளாவிய கல்விசார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய மைல்கல்லாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேலதிக தகவல்களுக்கு:

 

மாநாட்டுத் தலைவர்

த. பரந்தாமன்

வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை

 

மாநாட்டு செயலாளர்

எம். எஸ். தயராஜ்

வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை

 

மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

இணையதளம்: https://www.fcm.esn.ac.lk/iccm2026

Related Articles