பாதுகாப்புச் செயலாளர் இலங்கை விமானப்படை வண்ண விருது 2024-2025 நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்றார்

பாதுகாப்புச் செயலாளர் இலங்கை விமானப்படை வண்ண விருது 2024-2025 நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்றார்
  • :

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி Dr. (திருமதி) ருவினி ரஸிகா பெரேரா அவர்களுடன், ஜூன் 02 ஆம் திகதி அத்திடியவில் அமைந்துள்ள Eagle’s Lakeside Banquet and Convention Hall ல் நடைபெற்ற 2024–2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை விமானப்படை வண்ண விருது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்விற்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க வரவேற்றார். இலங்கை விமானப்படையால் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வில், 33 விளையாட்டுத் துறைகளில் சிறப்பு சாதனைகளை ஈட்டிய விமானப்படை விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கு வண்ண விருதுகள் மற்றும் விசேட விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், விருது பெற்றவர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டியதுடன், விளையாட்டு தலைமைத்துவம், குழு ஒத்துழைப்பு மற்றும் மனோதிடத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார். மேலும், தொழில்முறைத் திறனையும் தேசிய மட்டப் பிரதிநிதித்துவத்தையும் வலுப்படுத்தும் ஒரு அங்கமாக விளையாட்டை ஊக்குவிப்பதில் விமானப்படை தொடர்ந்து மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

Related Articles