க.பொ.த சாதாரண தரப் பரீட்சை - 2024 (2025) பெறுபேறுகளை மீள் பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேற்குறித்த பரீட்சையின் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பப்படிவங்கள் நிகழ்நிலையில் மாத்திரம் கோரப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆகிய இருவகைப் பரீட்சார்த்திகளும் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் போது தாமே விண்ணப்பங்களை முன்வைத்தல் வேண்டும்.
விண்ணப்பம் கோரப்படுதலானது 2025.07.14 ஆம் திகதி ஆரம்பமாவதோடு 2025.07.28 ஆம் திகதி நிறைவடையும் என்றும் பரிட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..



