கைவினைப் பொருட்கள், பரிசுகள், ஆபரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் தொழில் துறையில் ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதற்குக் காணப்படும் தொழில் முயற்சியாளர்களுக்கான விசேட திட்டமொன்றை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) அண்மையில் கொழும்பில் நடாத்தியது.
இத்திட்டத்திற்கு ஏற்றுமதிச் சந்தைக்கு நுழைவதற்கான ஆற்றலை வெளிப்படுத்தும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 100 தொழில் முயற்சியாளர்கள் ஒன்று சேர்ந்ததுடன் அவர்களின் அறிவு மற்றும் ஆற்றலை அதிகரிப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.


