இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களின் பாடசாலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்காக புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (31) நடைபெற்றது.
இதன்போது வேலைநாட்டுத் தொழில் வாய்ப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் 84 பிள்ளைகளுக்கு 2,655 பெறுமதியான புலமைப் பரிசில் பகிர்ந்தளிக்கப்பட்டது.


