யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் 300 மில்லியன் ரூபாவிலான மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் இன்றைய தினம் (01.09.2025) திங்கட்கிழமை காலை 09.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக மாண்புமிகு ஜனாதிபதி
அநுர குமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, பிரதி அமைச்சர் கெளரவ சுனில் வட்டஹல, பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கெளரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, பிரதம செயலாளர், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்குபற்றினார்கள்.


