கலா ஓயா ஆற்றுப் படுகையில் உயர் மற்றும் மத்திய பிரதேசங்களில் பெய்த கடும் மழை காரணமாக கலா ஓயா நீர்மட்டம் வெள்ள எச்சரிக்கையை நெருங்கியுள்ளது. மேலும் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேறும் வான் கதவுகள் திறக்கப்பட்டு தற்போது 17000 கன அடி வேகத்தில் நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. தற்போது நீர்த் தேக்கத்திற்கு கிடைக்கும் நீர் கொள்ளளவுக்கு இணங்க எதிர்காலத்தில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்பட வேண்டியேற்படலாம்.
இந்நிலை காரணமாக ஆற்றுப்படைகையை அண்மித்துள்ள ராஜாங்கனை, நொச்சியாகம, வனாத்தவில்லு மற்றும் கதுருவலகஸ்வெவ போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட வெள்ளப்பெருக்கின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலை குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அப்பிரதேச மக்களையும் அந்தப் பிரதேசங்களுக்கு ஊடாக பயணிக்கும் வாகன ஓட்டுனர்களிடமும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இது குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.