தெதுறுஓயா ஆற்றுப் படுகை யின் உயர் மற்றும் மத்திய பிரதேசங்களில் ஏற்பட்ட அதிக மழை காரணமாக தெதுறுஓயாவின் நீர்மட்டம் வெள்ள அனர்த்தம் ஒன்றை ஏற்படுத்தும் நிலையை அண்மித்துள்ளது.
மேலும் ஓயாதெதுறு நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேறும் வான் கதவுகள் தற்போது நிமிடத்திற்கு 16000 கன அடி வேகத்தில் தெதுறுஓயாவிற்கு அனுப்பப்படுகிறது. தற்போது நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் நீர் கொள்ளளவைப் பொறுத்து, எதிர்காலத்தில் இந்த அளவை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும்.
இந்நிலை காரணமாக ஆற்றுப் படுகையில் உள்ள வாரியபொல, நிகவரெடிய, மஹவ, கொபெயிகனே, பிங்கிரிய, பள்ளம், சிலாபம், ஆராச்சிகட்டுவ மற்றும் றஸ்னாயகபுர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட வெள்ளப்பெருக்கின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாயம் காணப்படுகின்றது.
இது தொடர்பாக மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அப்பிரதேச மக்களையும் அந்தப் பிரதேசங்களுக்கு ஊடாக பயணிக்கும் வாகன ஓட்டுனர்களிடமும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இது குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.