கிளீன் ஸ்ரீ லங்கா ஒருங்கிணைப்பில் மேல் மாகாணத்தில் 22 டெங்கு அதி அபாய வலயங்களை உள்ளடக்கிய வகையில் நாளை (05) முதல் விசேட டெங்கு தடுப்பு நடவடிக்கை

கிளீன் ஸ்ரீ லங்கா ஒருங்கிணைப்பில் மேல் மாகாணத்தில் 22 டெங்கு அதி அபாய வலயங்களை உள்ளடக்கிய வகையில் நாளை (05) முதல் விசேட டெங்கு தடுப்பு நடவடிக்கை
  • :

வேகமாக பரவும் டெங்கு அச்சுறுத்தலை தடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்று கிளீன் ஸ்ரீ லங்கா செயலகத்தில் இன்று (04) முற்பகல் நடைபெற்றது.

மேல் மாகாணத்தில் 22 டெங்கு அதி அபாய வலயங்களை உள்ளடக்கிய வகையில் நாளை (05) முதல் விசேட டெங்கு தடுப்பு நடவடிக்கை ஒன்றை அமுல்படுத்த அதன் போது தீர்மானிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை ஜனாதிபதி செயலகத்தின் சார்பில் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் ஒருங்கிணைப்பில் அமுல்படுத்தப்படும் அதேவேளை, சுகாதாரப் பிரிவுகள், முப்படைகள், இலங்கை போலீஸ், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் உள்ளிட்ட அரச மற்றும் சமூக பிரதிநிதி குழுக்கள் பலவற்றின் ஒன்றிணைந்த பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும்.

அதன்படி, டெங்கு தடுப்பிற்கான மக்கள் பங்களிப்பை அதிகரித்து, மேல் மாகாணத்தின் அனைத்து 23 டெங்கு அதி அபாய வலயங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அந்த அதி அபாய வலயங்கள் பின்வருமாறு:

கொழும்பு மாவட்டம் (சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் -10):- மகரகம, கடுவெல, ஹோமாகம, கொத்தடுவ, பத்தரமுல்ல, பிலியந்தல, கொழும்பு மாநகர சபை-D1, D3, D4

கம்பஹா மாவட்டம் (சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் -8):- பியகம, களணிய, சீதுவ, ஜா-எல, மஹர, வத்தல, நீர்கொழும்பு, மினுவங்கொட.

களுத்துறை மாவட்டம் (சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் -5):- பாணந்துறை, பண்டாரகம, ஹொரண, இங்கிரிய, களுத்துறை

கிளீன் ஸ்ரீ லங்கா செயலகம், தேசிய டெங்கு தடுப்பு நிறுவனம், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, இலங்கை போலீஸ், இலங்கை கடற்படை, இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை, அரசாங்கத் தகவல் திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் குழுவினர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 

- ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related Articles