நாளை (05) முதல் மேல் மாகாணத்தில் டெங்கு அதிக அபாயம் கொண்ட 22 வலயங்களை உள்ளடக்கும் வகையில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை Clean Sri Lanka திட்டத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் முன்னெடுக்கப்படுவதுடன், சுகாதாரப் பிரிவினர், முப்படையினர், இலங்கை பொலிஸார், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அரச மற்றும் சமூக பிரதிநிதிகள் பலரின் கூட்டுப் பங்கேற்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
டெங்கு ஒழிப்பிற்காக பொதுமக்களின் பங்களிப்பை அதிகரித்துக் கொண்டு, மேல் மாகாணத்தின் டெங்கு அதிக அபாயம் கொண்ட 23 வலயங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த கூட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது


